Visits

Sunday 7 April 2013

நீதானே என் பொன்வசந்தம்




         (இது நாள் வரைக்கும் படம் பாக்காத யாரும் இதுக்கு மேல படிக்க வேணாம். ஏன்னா சத்தியமா சொல்றேன்,இது உங்களுக்கு என்னன்னே புரியாது.)


        இந்த படம் என்னை இந்த அளவுக்கு affect பண்ணும்-னு நான் நினைச்சே பாக்கல. நானும் விக்னேஷும் Devi Multiplex-ல Nightshow  போயிருந்தோம்.Facebook post-களிலும் நண்பர்களின் பட அனுபவங்களையும் பார்த்து,கேட்டு அறிந்த வரை,படம் செம மொக்கை-னே நினைச்சோம்.படம் ஆரம்பிச்ச 10 நிமிஷத்திலேயே என் நினைப்பு தவிடு பொடியானது.“ Movies that made an Impact ”-ங்கற list-ல இதுவும் சேரும்.ஆனா எல்லாருமே இதைத்தான் உணர்ந்தாங்களா ?-னு கேட்டா அதுக்கு என் கிட்ட பதில் இல்ல.இந்த படம் அளவுக்கு Mixed Reviews வேற எந்த படத்துக்கும் வந்ததில்ல.ஒருத்தன் என்னடான்னா,“ மச்சான்! படம் Chance-ஏ இல்ல! செமயா இருக்கு ! ”-ங்கறான்.
இன்னொருத்தன், “ படமாடா அது? ஏதோ பாட்டு album வீடியோ பாத்த மாதிரி இருக்குது! அடுத்தவன் நேர்லயும் போன்லயும் கடலை போடுறத நான் ஏன் காசு குடுத்து பார்த்தேன்னு தோணுது ?! ”-ங்கறான்.

சரி.இதெல்லாம் விட்டுட்டு படம் என்னை எப்படி affect பண்ணிச்சு-னு பாப்போம்.படம் பாத்துட்டு இருக்கும்போதோ, intermission-லயோ, எனக்கு இதெல்லாம் தோணல. படம் முடிஞ்சு வீட்டுக்கு வந்து night தூங்கறதுக்கு முன்னாடி அதுல வர மாதிரியே நம்மளும் Draft-ல இருக்கறத எல்லாம் அனுப்பிரலாமா? –னு தோணிச்சு . எதுக்குடா வீண் வம்பு? பேசாம Facebook-ல ஒரு status-உம், நண்பர்களுக்கு ஒரு SMS-உம் அனுப்பிரலாம்...
( உதாரணம் : நீதானே என் பொன்வசந்தம் –        One AWESOME Movie – A Must Watch! ) ஆனா கழுத ஏன்னே தெரில்ல ! கையும் ஓடல! வாயும் சும்மா இருக்கல! ஏதாவது பண்ணியே ஆகனும்! அப்போ தோணிச்சு - பேசாம ரொம்ப நாளா யோசிச்சுட்டு இருந்த BLOG ஐடியா-வ ஏன் இப்போ தட்டி எழுப்ப கூடாது?-னு!! காசா ? பணமா ? சும்மா வெட்டியா இருக்கறதுக்கு நம்மளும் ஏதாவது பண்ணலாமே ! நம்ம FAMILY-ல வேற நாலு பேரு  ஏற்கனவே BLOG எல்லாம் வச்சிருக்காங்க. So, பரம்பரை பரம்பரையா வந்த சம்பிரதாயத்த, நம்மளும் follow பண்ணலாம். அவங்க அளவுக்கு எழுதுற திறமை இல்ல-னாலும் போகப்போக வளர்த்துக்கலாம். ஆனா நம்ம அளவுக்கு அவங்களுக்கு Fans இல்ல!!

And so here we go...

DISCLAIMER


இந்த பதிவில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் என் வாழ்கையில் இது வரை வந்து போன சில மனிதர்களே, குறிப்பாக பெண் கதாபாத்திரங்கள் அனைத்துமே. இதை படிக்கும் பொழுது மனம் நொந்து விடாமல் இருப்பதற்காக அந்த பெண் பாத்திரங்கள் அனைத்தும் NITHYA ( படத்தில் வரும் பெயர் ) என்றே அழைக்கப் படுவார்கள். என் நிஜக்கதை என்றாலும் என் பெயர் போடாமல் அதற்கு பதிலாக VARUN ( படத்தில் வரும் பெயர் ) என்ற பெயரே கதை நெடுக வரும்.

படித்த பின் நண்பர்களோ,சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களோ என்னிடம் இது பற்றி பேச வேண்டாம். நன்றி!



JULY 2001..


சரியா சொல்லனும்னா மூன்றாம் வகுப்பில்!
என்னடா 3-ஆம் கிளாஸ்-லயேவா ?? –னு கேக்கறீங்களா?? ஒரு நிமிஷம் உங்க Flashback போய் பாத்துட்டு வாங்க! அங்கயும் ஒரு நித்யா 3-ஆம் கிளாஸ்-ல உக்காந்துகிட்டு இருப்பா! ( உங்க நித்யா ! ) எல்லா சினிமாலயும் வர மாதிரி என் நித்யாவும் அந்த வருஷம் New Admission தான்! ரொம்ப நல்லா படிக்கிற பொண்ணுதான்..நானும் நிறைய தடவை யோசிச்சு பாத்துட்டேன் – ஆனா எப்படி நாங்க ரெண்டு பெரும் Friends ஆனோம்-னு ஞாபகம் வரல.ஒருவேளை அவளுக்கு ஞாபகம் இருந்தா இத படிச்சதுக்கு அப்பறம் எனக்கு தெரிய வாய்ப்பிருக்கு.என்னவோ தெரியல.. அவ என் ஸ்கூல்-ல சேர்ந்த கொஞ்ச நாள்-லயே நானும் அவளும் ரொம்ப Close-Friends ஆயிட்டோம். ஒருவேளை அந்த வயசிலே இந்த Ego-சண்டை எல்லாம் தெரியாம இருந்ததால-னு நினைக்கிறேன். நாங்க ரெண்டு பேரும் பேசாத விஷயமே இல்ல..ஒரே Van-ல தான் போயிட்டு இருந்தோம்.Van-ல கடைசி Row-ல அவ பக்கத்துல தான் எப்பயும் உக்காருவேன். அவ வீடு வர வரைக்கும் பேசிகிட்டே இருப்பா.அப்போ ஏன்னே தெரியல.. என்கிட்டே மட்டும் தான் இதெல்லாம் சொல்லுவா.. ஒரு சின்ன விஷயத்துக்கு கூட பொண்ணுங்க Over-React பண்ணுவாங்கன்னு நான் அவள பாத்து தான் தெரிஞ்சுகிட்டேன்.





Lunch கூட ஒன்னா தான் சாப்பிடுவோம்.. முக்கியமா நான் முதன்முதலா என் Lunch-அ Share பண்ணிகிட்ட Friend அவதான். எனக்கு Noodles பிடிக்கும்னு வாரத்தில ரெண்டு நாளைக்கு Noodles கொண்டு வருவா..அப்போ அவளோட Favorite தயிர்சாதம் தான்! எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் அவளுக்கு பிடிச்சிருந்துது-னா அது தயிர்சாதம் மட்டும்தான்! அவ Noodles கொண்டு வர அன்னிக்கெல்லாம் நானும் தவறாம என் அம்மாட்ட சொல்லி தயிர்சாதம் கொண்டு போயிடுவேன்.. Class Test போதெல்லாம் பெஞ்சுக்கு ரெண்டு பேர் உக்கார சொல்லுவாங்க. நித்யா எப்போதுமே நாமதான் சேர்ந்து உக்காரணும்னு பிடிவாதமா இருப்பா.. இதுலயும் என் பேனா-ல எழுதினா தான் Test நல்லா போகும்னு வேற சொல்லுவா.. So, பேனாவ கூட Exchange பண்ணுவா... கிறுக்குத்தனமாத்தான் இருக்கு... ஆனா இதையும் பண்ணுவோம். ( சிரிக்காம உங்க Flashback-ல போய் பாருங்க.. நீங்களும் இத மாதிரி ஏதாவது கிறுக்குத்தனமா பண்ணிருப்பிங்க ).


FEBRUARY 2, 2002


Class-க்கு ஒரு புது டீச்சர் (தமிழ்) வந்தாங்க. நல்லா ஞாபகம் இருக்கு. அன்றைய தினத்தின் தனித்தன்மைய பத்தி சொன்னாங்க.. ( 2-2-2002 ).. மறுபடியும் அதே மாசத்தில இது மாதிரி ரெண்டு நாள் இருக்கு-ன்னும் சொன்னாங்க.. எல்லா டீச்சர் மாதிரியும் இல்லாம கொஞ்சம் வித்தியாசம் காமிச்சாங்க.. அன்னிக்கே அவங்கள எல்லாருக்குமே ரொம்ப பிடிச்சிடுச்சு. வீட்டுக்கு போகும்போது இத பத்தி தான் சொல்லிட்டு இருந்தேன் அவகிட்ட. அப்போ தான் தெரிஞ்சது வந்தது அவங்க அம்மா-னு!! அந்த வயசில அவ Christian-ங்கற விஷயம் ஏனோ என்னை கொஞ்சம் உறுத்திச்சு. காலைல Van-ல அவ ஏறுவதற்கு முன் என் அம்மா வெச்சு விட்ட விபூதி-ய அழிக்கறது என் வழக்கம்.. இந்த விஷயம் இப்பதான் என் அம்மாவுக்கே தெரியும்! அவ பிறந்த நாளும் என் அம்மா பிறந்த நாளும் ஒரே நாள்..இன்னொரு விஷயம்.. இது யார் வீட்டுலயும் நடக்காத கூத்து. எங்க வீட்டுல ஒரு ரோஜா செடி உண்டு.எனக்கு கூட இப்படி எல்லாம் தோணல..ஆனா என் அம்மாவும் பாட்டியும்,நித்யா எனக்கு நல்ல Friend-னு தெரிஞ்சு,ஒரு நாள் காலைல ஒரு ரோஜா பூவை கையில கொடுத்து, “ இத நித்யா கிட்ட குடுடா ”-னு சொன்னாங்க. நான் வேற, ” இல்ல பாட்டி! நானும் நித்யா-வும் Friends-தான் “-னு சொன்னேன்!பாட்டியும் அம்மாவும் என்னை அசிங்கமா ஒரு பார்வை பாத்தாங்க... இதுக்கு நடுவுல தாத்தா வந்து, ” உன் Girlfriend-க்கு குடுடா ! ”-னு சொன்னா. ( தாத்தா அவ்வப்போது “பங்கஜம்” என்கிற தன் சிறு வயது Girlfriend பற்றி பேசுவது தனிக்கதை ! ) ஆனா என்ன சோதனையோ, Lunch Break-ல கொடுக்கலாம்-னு வச்சிருந்த அந்த ரோஜா-வை யாரோ ஒரு பொண்ணு Interval-லயே ஆட்டைய போட்டு தலை-ல வச்சுகிட்டா! தலையெழுத்துடா சாமி ! நானும் இதுக்காக சண்டையெல்லாம் போட்டு அந்த ரோஜா-வை வாங்கி நித்யா-கிட்ட கொடுத்தேன்-னு நினைக்காதீங்க..நான் அவ்ளோ பெரிய Hero எல்லாம் இல்ல.
இந்த நட்பு 3 வருஷத்துக்கு இதே மாதிரி தொடர்ந்தது..


MARCH 2004...


ஐந்தாம் கிளாஸ் முடிச்ச உடனே நான் ஸ்கூல் மாறனும்-னு அப்பா சொல்லிட்டா.. என்னால உடனே அந்த முடிவ ஏத்துக்க முடியல.. அந்த ஸ்கூல, அந்த Friends-அ, முக்கியமா அவள விட்டுட்டு...

ஒரு நாள் அவகிட்ட இத பயந்துகிட்டே சொன்னேன்..
அவ திட்டுவா–னு இல்ல,அழுதுடுவா-னு தான்..
ஆனா என் வாழ்கையில மறக்க முடியாத ஒரு நாளா மாத்திட்டா..


வருண்
: நித்யா.. நான் அடுத்த வருஷம் வேற  ஸ்கூல் போறேன்..
நித்யா : நானும் சொல்லனும்னு நினைச்சேன்..நானும் வேற ஸ்கூல் போறேன்..
வருண்
: எங்க? அந்த பழைய ஸ்கூல்-க்கே திரும்பி போறியா?
நித்யா
: இல்லடா.. புது ஸ்கூல் தான்.. நீ?
வருண்
: Sri Akilandeswari Vidyalaya-னு ஸ்ரீரங்கம்-ல ஒரு ஸ்கூல் இருக்கு.. அங்க தான் சேர போறேன்..
நித்யா : Hey! Super da!! நானும் அங்க தான் Join பண்றேன்.. Same Pinch..!
வருண் : !!!!!!!!!!
( ரெண்டு பேரும் அவ்ளோ சந்தோஷமா வீட்டுக்கு போனோம்!! )
என்னால தாங்க முடியல.. மறுபடியும் அவ கூட தான் 5 வருஷம் படிக்க போறோம்..!
Best Feeling Ever !


அந்த லீவ்-ல Admission போது அவள பாத்தேன்.
அப்பறம் ஸ்கூல் பின்னால் இருக்கற பார்க்-ல கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம்.. கடைசியா அவ கூட நான் நிறைய நேரம் பேசினது அப்போ தான்..
பழைய ஸ்கூல் பத்தி தான் நிறைய பேசினோம்.. அவ தான் எப்பவுமே நிறைய சொல்லுவா..


                            



She remembers even the smallest of the happenings.In fact, all girls do...Girls never forget!I learnt this aspect about girls, only because of her…
இந்த விஷயத்த எல்லாம் அவ எழுதிருந்தா இன்னும் நிறைய எழுதிருப்பா! இன்னும் நல்லாவும் எழுதிருப்பா!



JUNE 2004…


புது ஸ்கூல்.. முதல் நாள்.. அதே மாதிரி ஒரு Van.. அதே மாதிரி Last row seats.. விபூதி அழிக்க நேரம் இல்ல.. ஏன்னா அவ எனக்கு முன்னாடியே ஏறிட்டா..
ஸ்கூல்-ல முதல் நாள் Introduction & Assembly முடிஞ்ச உடனே அது நடந்துச்சு.. அது நடக்காம இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்-னு நான் இப்போ யோசிச்சு பாக்கறேன்.. பதில் தெரியல..  புதுசா வந்தவங்க எல்லாரையும் கிளாஸ் பிரிச்சாங்க.. எனக்கு ஒண்ணுமே புரியல.. நித்யா எங்க போறாளோ அவ பின்னாடியே போனேன்.. அப்பறம் மெதுவா என்கிட்ட வந்தா. “ நீ எந்த ரூம் ? “-னு கேட்டா..நான் “404”–னு சொன்னேன்.. “ ஐயோ! எனக்கு 205 போட்ருக்காங்க.. நாம ரெண்டு பேரும் வேற வேற கிளாஸ்… நீ 3rd floor போகணும் “ -னு சொன்னா.. அப்போ தான் எனக்கு எல்லாமே புரிஞ்சது..



          

அந்த சில நிமிஷங்கள் என்னால தாங்கிக்கவே முடியல..

Evening Van-ல பாத்தேன். மறுபடியும் நிறைய பேசினோம்.என் Class பத்தி நான் சொல்ல வேண்டியது நிறைய இருந்துச்சு.. அவ  Class  பத்தி அவ நிறைய சொன்னா.ஒரே Class-ல இருந்திருந்தா இவ்ளோ பேச முடியாது-ங்கறதால எனக்கு அந்த பிரிவும் பிடிச்சிருந்துச்சு..ஆனா அவளுக்கு அவ Class அவ்ளோவா பிடிக்கல-னு தெரிஞ்சுது..காரணம் தெரியல!!

இவ்ளோ Close ஆக இருந்தும் ஏன் பிரிஞ்சோம்-னு தெரியல! அடுத்த சில நாள்-ல நான் பண்ண அந்த விஷயத்தாலயா?
அது என்ன Rules-னே தெரியல..Van-ல பசங்க முன்னாடியும்,பொண்ணுங்க பின்னாடியும் தான் உக்கார்றது வழக்கம்.. நான் மட்டும் ஏன் பின்னாடி போய் உக்கார்றேன்–னு சில பசங்க என்கிட்ட வந்து கேட்டாங்க.. நீயும் முன்னாடி வாடா-னு கூப்டாங்க.என் கிளாஸ் பசங்க கூப்ட்டு நான் போகல-னா நல்லா இருக்காது-னு சொல்லிட்டு நானும் முன்னாடி போய் உக்கார ஆரம்பிச்சேன்.
அவளும் என்கிட்ட இத பத்தி எதுவுமே கேக்கல.. ஏன்னே தெரியல!



                           


So, புது Class… புது Friends… புது Gang…
அதுக்கு அப்பறம் நானும் அவளும் பெருசா பேசிக்கவே இல்ல.ஏன்-னு எங்க ரெண்டு பேருக்குமே தெரியல.இத பத்தி நாங்க யோசிச்சே பாக்கல. நாங்க திரும்பி சேர ஒரு வாய்ப்பு அமையவும் இல்ல.
இப்போ நினைச்சு பாத்தா நிறைய What if ? Questions தோணுது.ஆனா எதுக்குமே எங்க ரெண்டு பேர்கிட்டயும் Answers இல்ல… இந்த உலகத்துல சண்டையே போடாம பிரிஞ்ச Friends நாங்களா தான் இருப்போம்.


புது ஸ்கூல் எனக்கு ரொம்ப நல்லாவே செட் ஆகிடுச்சு.ஆனா நித்யா-வுக்கான இடம் காலியாவே இருந்துச்சு.
I had to wait for 3 more years… to meet the next avatar of Nithya in my life… a new one…


AUGUST 2006…



இப்போ நான் எட்டாம் கிளாஸ்-ல இருக்கேன்..I Mid-Term  முடிஞ்சு கொஞ்ச நாள் ஆகிருந்துச்சு…மறுபடியும் ஒரு New Admission !


 

அவகூட நான் எப்படி Friend–ஆனேன்னு நல்லா ஞாபகம் இருக்கு.ஏன்னா அத  நான்  Plan பண்ணி செஞ்சேன்.என் வாழ்க்கையிலே முதல் தடவையா நான் Plan பண்ணி செஞ்ச உருப்படியான விஷயம் அதுதான்.அவகிட்ட போய் பேசினது!
அப்போதைய இங்கிலீஷ் டீச்சர் எனக்கு ஒரு வேலை கொடுத்தாங்க. அதுக்கு முன்னாடி வருஷம் Annual Exam Marklist வாங்கி கொடுக்கறது. இவ New Admission–ங்கறதால நித்யா-வோட Marklist மட்டும் இல்ல.


So, இதான் Chance-னு அவகிட்ட போய் பேசினேன்.முதல் தடவையா...

That I had already met and spoke with her in my head, is a totally different story!



வருண்
: Hi! நித்யா.. நீ எனக்கு ஒரு சின்ன Help பண்ணனும்?
நித்யா : ஹ்ம்ம்.. என்ன?
வருண் : இல்ல.. Class-ல எல்லார் கிட்டயும் Annual Exam Marklist, Collect பண்ணிட்டு இருக்கேன்… உன்னோடது மட்டும் Missing.
நித்யா : Oh! Sorry! என்னோடது வீட்ல இருக்கு.
I will get you tomorrow…
வருண் : It’s Ok! But don’t forget!


                           


அடுத்த நாள்..
( I Mid-Term-க்கான Papers எல்லாம் கொடுத்து முடிச்சு நான் 4-ஆவது ரேங்க் வாங்கியிருந்தேன்,ஆனா இதுக்காக நான் கவலை பட்டதே இல்ல.அது எனக்கு பழகி போயிருந்துச்சு. 4–ஆவது ரேங்க்! என் கூட ஸ்கூல் படிச்சவங்ககிட்ட கேட்டா இத பத்தி நிறைய சொல்லுவாங்க..! )


நித்யா
: Hey! நீ கேட்ட Marklist!
வருண் : ( அத வாங்கி பாத்துட்டு ), படிப்ஸ் போல? எப்பவுமே 1ST  ரேங்க் தானா?
நித்யா : ??.. Mostly! நீ?
வருண் : (சிரிச்சுகிட்டே) இல்லல்ல.. நான் எப்பவுமே 4–ஆவது 5–ஆவது ரேங்க் தான் எடுப்பேன்.. (கொஞ்சம் பெருமையா !)
நித்யா : Oh! Average-ஆ?
வருண் : ( என்னடா நம்ம Plan-ல வராத சீன்-லாம் வருதே ) ??!! Ok! Bye…
நித்யா : Bye!


நான் சொதப்பல! Plan படி தான் பேசினேன்… ஆனாலும் ஒரு Bulb வாங்கின Feeling… ( நான் மட்டும் தான் Maths-ல Centum! தெரியுமா?-னு கேக்கணும் போல இருந்துச்சு )

அவகிட்ட நான் கொஞ்சம் Distance maintain பண்ண ஆரம்பிச்சேன்.
(அதிசயமா Quarterly Exams-ல நான் 2-ஆவது ரேங்க்)
ஒரு நாள் அவளே என்கிட்ட வந்து பேசினா. அவ அப்போ 7–ஆவது அல்ல 8–ஆவது ரேங்க்  வாங்கிருந்தா.


நித்யா : வருண் ! Maths புலியோ? மறுபடியும் Centum !
வருண் : !! Thanks…


                           



அதுக்கப்புறம் நான் அவ கூட பேசறதுக்கு Plan-லாம் போடறதில்ல. நித்யா-வருண் ரொம்ப Close Friends ஆனோம்..


2007 (JAN-OCT)


Finally I found my “Nithya” in her... After several incidents…

Kho-Kho Practice
முடிஞ்சு பேசிகிட்டே அவ வீடு வரைக்கும் நடந்து வரது – சில நாளைக்கு “Anandham-ல போய் Pani பூரி சாப்பிடுறது (எப்பவுமே நான்தான் Pay பண்ணுவேன் !) – எனக்காக அவ Biology RecordNote-ல Diagrams வரைஞ்சு தரது – etc... இதெல்லாம் சேர்த்து எழுதனும்னா தனியா Book தான் எழுதனும்...! )


                           


அப்பறம் தேவையே இல்லாம நான் ஒரு தடவ அவ கூட சண்டை போட்டேன். English Project-க்கு ஒரு Radio-Show பண்ணணும். Class-ல இருக்குற எல்லாரையும் 6 க்ரூப்-ஆக பிரிச்சிரிந்தாங்க. என் க்ரூப் பண்ண Show செம ஹிட்! அவ க்ரூப் கொஞ்சமில்ல, நல்லாவே சொதப்பிட்டாங்க. ஒரு Friend-ங்கற முறைல அத Review பண்ணபோது நான் அநியாயத்துக்கு கலாய்ச்சுட்டேன்.அவ அழுதுட்டா...
என்கிட்ட நிறைய பேருக்கு பிடிக்காத விஷயம் இதான்.யாரையாவது கிண்டல் அடிக்க ஆரம்பிச்சேன்-னா அவங்க அழுதாலும் நிறுத்தாம ஓட்டறது!
நானும் இன்னும் சில Boys-உம் சேர்ந்து நிறையவே கிண்டல் பண்ணோம். அடுத்த நாள், “ சரி!பாவம் ஒரு Sorry-ஆவது கேப்போமே ! “-னு அவகிட்ட பேச போனேன். ஒரு பொண்ணு கூட நான் சண்டை போட்டது அது தான் முதல் தடவை. அவ வீடு கிட்ட சைக்கிளை தள்ளிகிட்டே போயிட்டு இருந்தோம்.


                             



வருண்
: நித்யா..
நித்யா : உன் Sorry ஒன்னும் எனக்கு தேவையில்ல.. நீ இனிமே என்கிட்ட பேச வேணாம்.
வருண் : நித்யா.. I am sorry... I din’t mean to hurt you...   நான் அவங்க கூட இருந்ததால தான் அப்படி பேசினேன்...Sorry Again.
நித்யா : அப்போ நீதான் எனக்கு Support பண்ணி பேசுவ-னு நான் நினைச்சது என் தப்பு தான் வருண்...
அந்த Gang பசங்கள்-ல ஒருத்தன் தானே நீ ? அப்போ அப்படி தானே பேசுவ??
(அவ கொஞ்சம் ஓவரா பேசின மாதிரி இருந்துச்சு.முக்கியமா என் Friends பத்தி அவ சொன்னது...)
நான் இனிமே உன் கூட பேச மாட்டேன் வருண்.. போ!
வருண் : தேவையில்ல நித்யா... நீ பேசல-ன்னா நான் ஒன்னும் செத்துட மாட்டேன்... GOODBYE.



                           


NOV 2007-NOV 2008


மறுபடியும் நித்யா-வுக்கான இடம் காலியானது..
ஆனா ஏன்-னு தெரியல... எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு. நான் இப்போ 10-ஆவது படிக்கிறேன்.இதுக்காக என் பாட்டி வீட்டுக்கு வந்தேன்,ஸ்கூல் பக்கத்துலயே. அப்பா, 10th-ல நல்ல மார்க் வாங்கணும்-னு, நான் பாட்டி வீட்டுல தங்கி படிக்க ஓகே சொன்னா ! என்னென்ன காரணத்துக்காக எல்லாம் நான் அங்க வந்தேன்-னு எனக்கு மட்டும்தான் தெரியும் !
என் சைக்கிளும் எடுத்துட்டு வந்திருந்தேன்.
“11th & 12th படிக்க சென்னை-ல இருக்கற Maharishi Vidya Mandir-ல தான் சேர போற “-னு அப்பா சொல்லிருந்தா. நானும் ஓகே சொல்லிட்டேன்.
சில விஷயங்கள் ஏன் நடக்குது-ன்னே நமக்கு தெரியாது.அது மாதிரி எனக்கும் நிறைய நடந்துச்சு.



தினமும் Lunch Break-ல வீட்டுல சாப்பிட்டு விட்டு நான் திரும்பி போகும்போது, முன்னாடி அவ நடந்து போய்கிட்டு இருப்பா. நானும் தவறாம Time-Fix பண்ணி சாப்பிட்டு, சரியா 1:20-க்கு வீட்ட விட்டு கிளம்பினா அவள Follow பண்ண கரெக்டா இருக்கும். நான் அவள Follow பண்றேன்-னு அவளுக்கும் தெரியும்.ஆனா அவளும் அந்த Time-அ கடைசி வரைக்கும் மாத்தவே இல்ல.அப்போ எல்லாம் எனக்கு தோணும் – “சண்டை போடாம இருந்திருந்தா
இந்நேரம் இப்படி எல்லாம் Follow பண்ணனும்-னு அவசியமே இல்ல! சே!”



                       



அப்பறம் ஒரு நாள் Class-ல நுழையும் போது அவ மேல நான் இடிச்சிட்டேன். (இத நான் Plan பண்ணல!) Sorry கேக்கறதா?-னு தெரியாம முழிச்சிட்டு நின்னேன். அவளே Sorry சொல்லிட்டு போயிட்டா. இந்த மாதிரி நான் Plan பண்ணாத நிறைய விஷயங்கள் அடுத்தடுத்து நடந்து, அவ பொறுமைய சோதிச்சது.ஒரு நாள் மதியம் செம மழை.. Lunch Break-ல வீட்டுக்கு போகும்போது சொட்டசொட்ட நனைஞ்சுட்டேன்.சொன்னா யாரும் நம்பமாட்டாங்க... எனக்கு கூட அப்படி ஒரு ஐடியா தோணல…ஆனா எதேச்சையா அவ வீடு கிட்ட இருக்கற ஒரு கோவில்-ல ஒதுங்கினேன். அவ என்னை தாண்டி வீட்டுக்கு போனா. (அவளும் அவ தங்கச்சியும்,கையில் ஒரு குடையோட வீட்டுக்கு உள்ள போக, ஒரு நொடி என்னை அவ பாத்துட்டு போறத பாத்தேன்.) ஒரு அஞ்சு நிமிஷம் மழை நிக்கற வரைக்கும் அங்கேயே நிக்கலாம்-னு முடிவு பண்ணேன்.கொஞ்ச நேரம் கழிச்சு, அவ தங்கச்சி ஒரு Airtel குடையோட என்கிட்ட வந்து, “நித்யா குடுக்க சொன்னா!”-னு சொல்லி கொடுத்துட்டு போனா. அவ வீட்டு பால்கனி-ல அவ ஒரு துண்டை வச்சு தலைய துவட்டுரத பாத்தேன்.நான் பாக்கறது தெரிஞ்ச உடனே தலைய திருப்பிகிட்டா.நான் என் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிச்சேன்.. குடை இருந்தும் கிறுக்குப்பயல் மாதிரி நான் நனைஞ்சுக்கிட்டே ( Dance ஆடிக்கிட்டே ) வீட்டுக்கு போனேன். அம்மா, வெளில நான் பண்றத பாத்துட்டு ,” யார்ரா குடை எல்லாம் குடுத்தா ? ஆனாலும் லூசு மாதிரி நனைஞ்சுண்டே வர ?!? ”-னு கேட்டா.நானும் அதே லூசு சிரிப்போட உள்ள போனேன். அப்பறம் Class-ல நிறைய தடவ நான் அவள  Impress பண்ணனும்-ங்கறதுக்காக வெட்டி சீன் போடுவேன்.        ( குறிப்பா Maths Classes ! ) அதெல்லாம் எப்படி இருக்கும்-னு உங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும். அவளுக்கும் தெரியும்!

( இதுவே போதும்-னு நினைக்கிறன் ! நான் தெரிஞ்சோ தெரியாமலோ,அவள Follow பண்ற ஒரு லோக்கல் பொறுக்கியிடம் தகராறு பண்ணியது – Class Noticeboard-ல என்னையும் அவளையும் சேர்த்து வச்சு அழிக்க முடியாத மாதிரி எவனோ எழுதினது – Chemistry Lab-ல நானும் அவளும் தனியா  இருந்தபோது, அரைமணி நேரம் நான் அவகிட்ட Sorry கேட்டது (Radio-show-க்கு) & Thanks (குடை) சொன்னது – இதெல்லாம் அரைகுறையா தெரிஞ்சுகிட்டு மீதி கதையை அவங்களே Develop பண்ணி Friends கலாய்ச்சது – இப்படி எல்லாத்தையும் சொன்னா ஒரு BOOK-ஏ எழுதிரலாம்...)


JANUARY 2009…


Farewell Day-க்கு கொஞ்ச நாள் முன்னாடி அவளே என்கிட்ட வந்து பேசினா.ரொம்ப நாள் கழிச்சு நிறைய நேரம் பேசினோம்.அந்த சண்டைய பத்தி பேச வேணாம்-னு முதல்லயே சொல்லிட்டா.அவ வீட்டுக்கு பக்கத்துல இருக்குற Children’s Park-ல தான் பேசிட்டு இருந்தோம்.கடைசியா, Pani பூரி சாப்பிடலாமா?-னு நான் கேட்டேன்.சாப்பிட்டோம்.

                      


வருண் : 10th முடிச்சிட்டு எந்த ஸ்கூல்-ல சேரலாம்-னு ஐடியா வச்சிருக்க நித்யா ?
நித்யா : சென்னை-ல Mahrishi Vidya Mandir-னு ஒரு ஸ்கூல்.CBSE…அங்க தான் சேரலாம்-னு இருக்கேன். நீ?
வருண் : இன்னும் Decide பண்ல!  ( அப்பா! You are great! )


அன்று இரவே அந்த ஸ்கூல்-ல நான் சேர போறதில்ல-னு முடிவு பண்ணிட்டேன். CBSE-ல 11th & 12th படிக்கறது RISK-னு தோணிச்சு. அதுவும் நித்யா இருக்கும் போது ரொம்ப கஷ்டம்.அதுவும் இல்லாம நான் அவளுக்காக தான் அந்த ஸ்கூல்-ல Join பண்ணேன்-னு அவ நினைப்பா.இந்த முடிவ நான் எடுத்தது அப்பா-வுக்கே அதிர்ச்சியா இருந்துச்சு.
அதுதான் நாங்க கடைசியே பேசிக்கிட்டது...
அதுக்கப்பறம் நான் அவள பாக்கவே இல்ல.இன்று வரை அவகிட்ட பேசல.
நாங்க திரும்பி சேர ஒரு வாய்ப்பு அமையவும் இல்ல.இப்போ நினைச்சு பாத்தா நிறைய What if? Questions தோணுது.ஆனா எதுக்குமே எங்க ரெண்டு பேர்கிட்டயும் Answers இல்ல…
இந்த உலகத்துல காரணமே இல்லாம பிரிஞ்ச Friends நாங்களா தான் இருப்போம்.


DECEMBER 2012…


இந்த படம் பாக்கற வரைக்கும் இவங்க ரெண்டு பேர பத்தி நான் அவ்ளோவா யோசிக்கவே இல்ல... ஏனோ, அதுல நடந்த நிறைய விஷயங்கள் எனக்கும் நடந்த மாதிரி ஒரு Feeling… அதனால தான் இந்த Post… ஒரே ஒரு வித்தியாசம்தான். படத்துல வருணும் நித்யாவும் Love பண்ணாங்க… Ego-னால நிறைய தடவ சண்டை போட்டுகிட்டாங்க..கடைசியா சேர்ந்துட்டாங்க.ஆனா நாங்க சண்டையும் போட்டுக்கல... காரணமே இல்லாம,பேசிக்காம பிரிஞ்சிட்டோம்... இன்னமும் பேசிக்கறது இல்ல. இதுக்கெல்லாம் யாரையுமே காரணமா சொல்ல முடியாது.படத்தில வர வருணோட வாழ்கையில ஒரே பெண்தான் நித்யாவாக வருகிறாள்.எனக்கு ஒவ்வொரு Stage-லயும் ஒரு நித்யா.
இதே படம் நான் ஸ்கூல் படிச்சிட்டு இருந்த நேரத்தில வந்திருந்தா, இந்நேரம் என் வாழ்க்கை இதே மாதிரி இருந்திருக்காது-ங்கறது நிச்சயம்!
இந்த பதிவுக்கு அர்த்தமே இல்லாம போயிருக்கும்.


To Nithya(s),

ஆனா நீங்க ரெண்டு பேரும் இத தெரிஞ்சுக்கனும்.
As a good friend, I miss both of you very much…
-VARUN.


MARCH 2013


இப்போ College II year... Potential நித்யா–க்கள் நிறைய பேர பாத்துட்டேன். ஆனாலும் நித்யா-வுக்கான இடம் காலியாவே இருக்கு...இத நீங்க நம்பித்தான்
ஆகணும்!

என்றென்றும் நித்யா-வுக்கான தேடலுடன்,
-VARUN.