Visits

Sunday 9 March 2014

இதைப் படிங்க முதல்ல!



 
   
     -  Dedicated to My Mom and all other Women


Disclaimer

It has been a big gap since I last wrote, and in this period, I admit I have learnt a lot, especially about people. The last blog update was quite emotional and had a massive response, even from people who rarely found time to read. I had to maintain some standards to always stay at that level and that’s perhaps an indirect reason for this long gap. It’s not that I never got anything to write, but it is just that I put pressure on myself regarding how good my work should be and didn't manage to write. This weekend, I had an awesome time in college, organizing an event and decided to finally go with it. I met a few people and got new and exciting friends. The rest is going to be a story about how I dealt with them, how they dealt with me and what lessons were actually taught and how I related those incidents with my past!

 

கடந்த சனிக்கிழமை என் வாழ்கையில் மறக்க முடியாத ஒரு நாள். நெருங்கிய நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் ஏன் என்பது தெரியும்! 

எங்கள் கல்லூரியில் KRIYA என்ற Techno-Management Fest நடந்து முடிந்தது! அதில் ROOTKRIYA என்ற ஒரு தனிச்சிறப்புமிக்க event ஒன்றை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம்! மூன்று நாட்களுக்கு, கிட்டத்திட்ட 80 பேர் இணைந்து நடத்திய ROOTKRIYA-வில் மொத்தம் 850 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே கொண்ட இந்த ROOTKRIYA-வில் நானும் ஒரு event-ஐ, இரண்டு நாட்களுக்கு நடத்தினேன். அது மிகவும் வித்தியாசமான ஒரு eventScenario! கலந்து கொள்பவருக்கு ஒரு மோசமான அல்லது மிக மோசமான சூழ்நிலையை கொடுத்து அதை அவர் எப்படி கையாளுவார் என்று கேட்டு அறிவதே எங்கள் வேலை. அவரது பதிலுக்கு ஏற்றவாறு Points கொடுப்போம். 

எளிதில் புரிந்து கொள்ள, Truth (or)Dare போன்ற ஒரு Game என்று வைத்துக் கொள்ளலாம்! இதை நடத்துவது சாதாரண காரியம் அல்ல! நாள் முழுக்க, ஒரே இடத்தில உட்கார்ந்துகொண்டு போவோர் வருவோரை வம்புக்கு இழுப்பது என்பது மிகவும் கடினமான வேலை. எங்களுக்கு எதிரில் அமர்ந்துகொண்டு போட்டியில் பங்கேற்ற அனைவரும் வெளியில் புலி-யாக திரிந்தாலும், எங்கள் முன் வெறும் சுண்டெலிகள் ஆகிப் போனார்கள். வாயாடிகள் என்று சொல்லப்பட்டவர்கள் கூட எங்களிடம் பதில் பேசத் திணறினர். சிலர் தங்களது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே சொல்லக்கூடிய விஷயங்களையும் எங்களுடன் பகிர்ந்துகொண்டனர்! ஆக மொத்தத்தில் இந்த event மிக அருமையான ஒன்று! நிற்க!
ஏன் என்று இப்போது புரிய வைக்கிறேன்!

 

வந்திருந்த பெண்களில் சிலர், என்னிடம் அநியாயமான முறையில் ஜொள்ளு விட்டது –நீ ரொம்ப அழகா இருக்க!, திடீர்னு நான் உனக்கு ‘I Love You’ சொன்னா நீ என்ன சொல்லுவ?”-னு கேட்டது, “நாம் இருவரும் நாளை Dating போலாமா?”-னு கேட்டது, “இங்க இருக்குறவங்க எல்லாரையும் விட நீதான் Smart–ஆ இருக்க!”– இவை ஒரு சில உதாரணங்கள்!  ன் அளவு கடந்த சந்தோஷத்துக்கு இதெல்லாம் தான் காரணம்! இப்படியெல்லாம் கூறிய சில பெண்கள் மிக அழகாகவும் வேறு  இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது! இருந்தாலும், நான் நல்ல பையன் என்பதால், வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து, தங்கைகள் எங்கு இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்!


இதனால் ன் நெருங்கிய நண்பர்களுக்கும், தோழிகளுக்கும் கடும் வயிற்றெரிச்சல்! பாவம் இப்பொழுது தான் Gelusil வாங்கி கொடுத்துள்ளேன்!உங்கள் கோபம் புரிகிறது! இருந்தாலும் பரவாயில்லை! மேலே படியுங்கள்!

இது வரை எழுதியது, உங்களை இழுத்து வைத்து படிக்க வைப்பதற்காக! இனி எழுதப் போவது, நீங்கள் ஒவ்வொருவரும் சிந்திப்பதற்காக! நான் சந்தித்த மூன்று வித்தியாசமானவர்களும், அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்டதும்...


1. Thaariha Banu (19 years), a Muslim Girl, doing her second year B.E. in a reputed Engineering College.


Kailash: உன்னுடைய வாழ்நாள் லட்சியம் என்ன?
Banu: இல்ல! எனக்குன்னு எந்த லட்சியமும் நான் வச்சுக்கறது இல்ல! எப்படியா இருந்தாலும் என் வீட்ல ஒத்துக்க மாட்டாங்க! நான் Engineering முடிச்ச உடனே எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க! சின்ன வயசுல, Space Research Scientist ஆகனும்-ன்ற வெறி எனக்கு இருந்துச்சு! இப்போ அப்படி எதுவும் இல்ல! (சொல்லிவிட்டு சிரிக்கிறார்)

ஏனோ தெரியவில்லை, இந்த பதிலை கேட்டவுடன் எனக்கு அழுகை வந்து விட்டது! யார் கண்ணிலும் படாமல், ஒரு ஓரமாக சென்று தண்ணீர் குடித்துவிட்டு திரும்பி வந்தேன்! நம்மில் பலருக்கு தெரியவில்லை, ஒரு Muslim பெண்ணுக்கு, இந்த 21–ஆம் நூற்றாண்டிலும் இத்தனை கட்டுப்பாடுகள் இருக்கிறதென்று!

 

2. Priyanka (19 years), a Girl, an Engineering student, staying at PSG Tech Hostels.

Kailash: திடீர்-னு ஒரு நாள் நீ பையனா மாறிட்ட! அப்போ நீ எப்படி react பண்ணுவ?
Priyanka: ஆஹா! நான் ரொம்ப ஜாலியா இருப்பேன். இப்போ என்னால பண்ண முடியாதது எல்லாமே செஞ்சுருவேன்! எப்போ வேணும்னாலும் வெளிய போகலாம்! நிறைய ஊர் சுத்துவேன்! முக்கியமா 6:30-க்குள்ள Hostel வரனும்-னு அவசியம் இல்ல! வீட்டுக்கு எந்த time–ல வேணும்னாலும் bus-லயே போலாம்! Cricket விளையாடுவேன்! நடு ரோட்ல dance ஆடுவேன்,etc.

மேலே கூறப்பட்ட எந்த ஒரு விஷயத்தையும், இதுவரை அவளால் செய்ய முடியவில்லை! பெண்கள், பெண்களாகவே இருப்பதைத் தான் இந்த சமூகம் விரும்புகிறது! பெண் சுதந்திரம் என்று வாய் பேசியவர்கள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள் என்று தெரியவில்லை! அப்படி இருந்தால், அவளால் ஏன் விரும்பிய நேரத்தில் எல்லாம், வெளியில் செல்ல முடிவதில்லை?


3. Prakash (20 years), a boy, doing his 3rd year Mechanical Engineering in a reputed Engineering College.

Kailash: அது ஏன் Mechanical Engineering பசங்க எப்ப பாத்தாலும் Mech தான் Gethu!”-னு சொல்லிட்டே இருக்கீங்க?
Prakash: ஏன்னா, எங்க Department–ல மட்டும் தான் பொண்ணுங்க கிடையாது. பொண்ணுங்க இருந்தாலே பிரச்சனை தான்! Friendship–அ பிரிச்சு விட்டுருவாங்க! ஆனா, நாங்க அப்படி இல்ல! நாங்க எல்லாம் ஒன்னாவே சுத்துவோம்! அதான் நாங்க எப்பவுமே Gethu!


பெண்களைப் பற்றிய இவனது புரிதல், ஒரு ஆணாக, என்னை தலை குனிய வைக்கிறது! என் நண்பர்களுள் ஒரு சிலர், இது போல பேசுவர். அவர்கள் இனியாவது மனம் திருந்த வேண்டும் என்பதே என் விருப்பம்!
இது போன்ற பெண்களுக்கு எதிரான கொள்கை வைத்துக் கொள்வதற்கு, ஒரு சில காரணங்கள் உண்டு. தற்போதைய சினிமா பாடல் வரிகள்! பெண்களுக்கு எதிரான போக்கை தூண்டிவிடும் ஏராளமான பாடல்கள் பெரும் ஹிட் ஆகியுள்ளன! “Why This Kolaveri??”, இந்த பொண்ணுங்களே இப்படித்தான், புரிஞ்சு போச்சுடா!”, “வேணாம் மச்சான்! வேணாம்! இந்த பொண்ணுங்க காதலு!”, “பெண்கள் என்றால் பொய்யா, பொய் தானா?” என சில உதாரணங்கள்! இதில் கொடுமை என்னவென்றால், இது போன்ற பாடல்களைத் தான் பெண்களும் விரும்பிக் கேட்கிறார்கள்!

 

இந்த மூன்று பேர் எனக்கு புரிய வைத்ததை, காலம் எனக்கு சில மாதங்களுக்கு முன்னரே புரிய வைத்தது. கடந்த September மாதம் முதலாக நான் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம், மரியாதை கொடுக்கத் தொடங்கினேன். இது திடீரென்று தோன்றிய ஞானம் அல்ல. பல நாட்களாக என்னை அறியாமல் நான் செய்து வந்ததை, தெரிந்தே செய்யத் தொடங்கினேன்.

எந்த ஒரு விஷயத்தையும் நேரடியாக அப்பாவிடம் சொல்வதை விட, அம்மாவிடம் சொல்லி, அவர் மூலமாக அதை அப்பாவுக்கு தெரிய வைப்பது என் போன்ற பையன்கள் நன்கு தெரிந்து வைத்திருக்கும் உத்தி! சிறு வயதில், Report Card-ல் கையெழுத்து வாங்குவதில் தொடங்கி, போன வருடம் புது Camera வாங்குவது பற்றி பேசியது வரை, நான் இந்த உத்தியைத் தான் கையாளுகிறேன்! அம்மாவிடம் எந்த நேரத்திலும் எது பற்றி வேண்டுமானாலும் பேசக் கூடிய எனக்கு, அப்பாவிடம் அவரது தற்போதைய Mood–ஐ அறிந்த பிறகே பேச முடியும்! உதாரணமாக, ஒரு கல்யாண நிகழ்ச்சியில் பார்த்த அழகான பெண்ணை பற்றியும், என்னால் உரிமையாக என் அம்மாவிடம் பேச முடியும். ஆனால், அப்பாவிடம்?? இது வரை முயற்சி செய்து பார்த்ததில்லை!

சில காலமாக, நான் எடுத்து வரும் முடிவுகளில் ஆண் நண்பர்களின் தாக்கத்தை விட பெண் நண்பர்களின் தாக்கமே அதிகம் இருக்கிறது. இதனை வெளிப்படையாக என்னிடம் சிலர் கூறியதும் உண்டு. இதற்கும் காரணம் இருக்கிறது. ஆண்கள், தாங்கள் எடுக்கும் முடிவுகளினால் பிறர் எந்த வகையில் பாதிக்கப் படுவார்கள் என்பது பற்றிய கவலை கொள்ளாதவர்கள்! ஆனால், பெண்கள் அப்படி அல்ல! உள்நோக்கத்தை விட, உலக நோக்கம் கொண்டவர்கள்! பல சமயங்களில் என் வெற்றிக்கும், இந்த உலக நோக்கத்தால் எனக்கு கிடைத்த மரியாதைக்கும் பெண்களே காரணம்.

“Behind every successful man, there is a Woman”
என்பது உண்மைதான்! பெண்களுக்கு பொறாமை அதிகம் என்று சொல்வதை நான் ஒரு போதும் ஏற்க மாட்டேன்! ஒரு பெண்ணின் மீது வேண்டுமானால் பெண்ணுக்கு பொறாமை ஏற்படலாம், ஒரு ஆணின் மீது ஏற்பட வாய்ப்பில்லை! பல முறை என் Blog பற்றி என் ஆண் நண்பர்களிடம் பேசியுள்ளேன். அவர்களுள் எவரும், உருப்படியாக ஒரு ஐடியா கொடுத்ததில்லை! சிலருக்கு, நான் Blog வைத்திருப்பது கூட தெரியாது! ஆனால், இப்பொழுதும், எந்தப் பதிவு போடுவதற்கு முன்னரும், நான் ஒரு பெண்ணிடம் அதனை படித்துப் பார்க்கச் செய்து, அதன் நிறை-குறைகளை அவள் அலசிய பிறகே, அதனை பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளேன், இது உட்பட!


என் வாழ்கையின் மிக மோசமான காலமாக நான் கருதும், கடந்த October மாதத்தில், எனக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனையின் போது, நெருங்கிய ஆண் நண்பர்கள் கூட என்னை கவனிக்கத் தவறினர். அதிலிருந்து நான் மீண்டு வர ஒரு பெண்ணின் இடைவிடாத ஊக்கமே காரணமாக இருந்தது. சில இரவுகளில், நான் தனிமையில் இருந்த நேரங்களில், அவள் பேசியதே என்னை இன்று வரை, எப்பொழுதம் சிரித்த முகத்துடன் பார்க்க வைக்கிறது! போன மாதம் Chicken Pox-ஆல் அவதிப்பட்டு வீட்டில் இருந்த நேரத்தில், ஒரு நாள் விடாது என் உடல்நிலை பற்றி விசாரித்தது சில பெண்களே! மிக நெருங்கிய ஆண் நண்பர்கள் சிலர் என்னை Phone-இல் தொடர்பு கொள்ளவும் தவறியது, சிறிய வருத்தத்தை ஏற்படுத்தியது! ஆண்களை பார்த்துக் கொள்வதில், ஆண்களை காட்டிலும், பெண்களுக்கே அதிக அக்கறை!

மன்னிக்கவும்! இதுதான் உண்மை, இதனை படித்த பிறகாவது ஆண் நண்பர்களுக்கு ஒரு ஞானம் தோன்றினால் அதுவே என் வெற்றி!

“Woman without Her Man, is nothing!” 
                                                       – This was the Past!
“Woman - without Her, Man is nothing!”
                                             – This will be the Future!


இனி என் கொள்கை, என் பாதை இப்படித்தான் இருக்கப் போகிறது! தனியாக நான் சென்றாலும் பரவாயில்லை! நோக்கம் ஒன்றே பெரிதானது!


Treat every woman in the same way, you treat your mother and shower her with the same respect. Men may be physically strong, but when it comes to mental toughness, it is women who stand tall among the rest! It is best, if you start sharing your problems with women, because only they can guide you in the best possible way! Every woman in this world needs to be cherished and celebrated for her sacrifice, acceptance, will power, and so many other noble qualities which, men should actually envy about! It must have been a shocking revelation for those people who have followed me and my activities during my school days. It’s about the way I have transformed, evolved as an individual. From “The Male Chauvinist Pig” during my early teens to “The Hardcore Feminist” at present, it has been an amazing journey so far. It will be shocking for a few and some may think, “Well! He’s trying to say something to us”. And I want the post to be an eye opener for some, so that they get to know of the need of the hour – “Respect to Women”.